அட்லி மட்டும் தான் போவாரா..? நாங்களும் போவோம்.. பாலிவுட் ஸ்டாருடன் இணைகிறாரா லோகேஷ் கனகராஜ்..?

By admin on ஆவணி 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மாநகரம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, லிட்டர் சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

   

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கடைசியாக விஜயை வைத்து லோகேஷ் லியோ திரைப்படம் ஓரளவு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்போது லோகேஷ் இயக்கும் கூலி படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் சூட்டிங் சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

 

இதனை தொடர்ந்து லோகேஷ் கைதி 2 திரைப்படத்தை இயக்க உள்ளதாக முன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது வந்த தகவலின் படி பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து லோகேஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். அமீர் காணை வைத்து லோகேஷ் இயக்கும் படம் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது.

சைபர் கிரைமில் ஆமிர்கான் புகார் | Aamir Khan files FIR against fake video,  says - hindutamil.in

இதற்கான பேச்சுவார்த்தைகள் சமூகமாக முடிந்தால் விரைவில் அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிரபல இயக்குனரான அல்லி ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றார். அந்த படத்தின் மூலமாக நயன்தாராவும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். அட்லியை தொடர்ந்து இப்போது லோகேஷும் பாலிவுட் ஸ்டாரை வைத்து படம் எடுப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆமிர்கான் நடிக்கும் குல்ஷன் குமார் பயோபிக் எப்போது?- பூஷன் குமார் பதில் |  update on gulshan kumar biopic - hindutamil.in