தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களும் முன்னணி நடிகர்களும் இன்றைய நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருந்த நடிகர்கள் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தமிழ் சினிமாவிலேயே ஒரு புதிய புரட்சி ஏற்படுத்தியவர்கள் தான் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசன்.
குடும்பம், புராணம், பக்தி, சமுதாயம் போன்ற பலவித கதைக்களங்களில் நடித்து பிரபலமானவர் சிவாஜி கணேசன். ஆக்சன், காதல் திரைப்படங்களில் சமூக சீர்திருத்த படங்களில் நடித்து புகழடைந்தவர் எம்ஜிஆர். இவர்கள் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் தான். சமூக வலைத்தளங்கள், இணையம் போன்றவைகள் இல்லாத காலத்திலேயே அத்தனை ரசிகர்களை கொண்டிருந்தவர்கள் சிவாஜி மற்றும் எம்ஜிஆர்.
இயக்குனர் கே சங்கர் தமிழ் திரைப்பட இயக்குனர், திரைப்பட தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் என்பதுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களை இயக்கியுள்ளார். சிவாஜி மற்றும் எம்ஜிஆரை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியவர் கே சங்கர்.

அப்படி ஒருமுறை கே. சங்கர் சிவாஜியையும் எம்ஜிஆரையும் வைத்து 1962 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணி மற்றும் 1963 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்த பணத்தோட்டம் ஆகிய படங்களை ஒரே நேரத்தில இயக்கிக் கொண்டிருந்தார்.
காலை முதல் மதியம் வரை சிவாஜியை வைத்து ஆலயமணி படப்பிடிப்பிலும் மதியம் முதல் இரவு வரை எம்ஜிஆரை வைத்து பணத்தோட்டம் பட படிப்பையும் நடத்தி வந்தார் இயக்குனர் கே சங்கர். அப்படி எடுக்கும் போது இவர் செய்த செயலால் நொந்துவிட்டார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
கே சங்கர் செய்தது என்னவென்றால் காலையில் வழக்கம்போல் சிவாஜி அவர்களை வைத்து ஆலயமணி சூட்டிங் முடித்த பிறகு மதியம் எம்ஜிஆர் வைத்து பணத்தோட்டம் சூட்டிங்குக்கு வந்துள்ளார். எப்போதுமே இரண்டு டேக்குகளுக்கு மேல் செல்லாத எம்.ஜி.ஆர் அன்றைய தினம் ஏழு எட்டு டேக்குகள் எடுத்து எம்ஜிஆரை நடிக்க வைத்து உள்ளார் கே. சங்கர். பொதுவாக எம்.ஜி.ஆரிடம் இரண்டு டேக்குகளுக்கு மேல் யாரும் கேட்கவே பயப்படுவார்கள். ஆனால் சங்கரோ அத்தனை டேக்கள் வாங்கி விட்டார். அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் எம்ஜிஆர் சங்கரை அழைத்துள்ளார்.

சங்கரை அழைத்த எம்.ஜி.ஆர் என்னப்பா காலைல சிவாஜி வச்சு படம் எடுத்துட்டு வந்தியா அப்படின்னு கேட்டிருக்கிறார். சங்கர் ஆமாம் என்று கூறியிருக்கிறார். பின்னர் பேசிய எம் ஜி ஆர் தம்பி சிவாஜி பிரமாதமா நடிப்பாரு அவர் நடிக்கிற பாணி வேறு நான் நடிக்கிற பாணி வேறு. அதனால என்னால எவ்வளவு நடிக்க முடியுமோ என்கிட்ட எவ்வளவு வருதோ அதை மட்டும் வாங்கிக்கோங்க அப்படின்னு பேசி அனுப்பி இருக்கார் எம்ஜிஆர்.
