Google Pay-வில் தெரியாத நபருக்கு பணம் அனுப்பிட்டீங்களா?.. திரும்ப பெற இதோ எளிய வழி..!

By Nanthini on ஆவணி 17, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பண பரிமாற்றம் என்பது அதிகரித்துவிட்டது. அப்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் google pay மற்றும் phonepe உள்ளிட்ட பல UPI செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக பண பரிமாற்றம் செய்வது என்பது எளிதாகி விட்டது. அதனைப் போலவே யு பி ஐ செயலிகள் பயன்பாட்டிற்கு வந்ததும் மக்கள் வங்கிக்கு செல்வதும் ஏடிஎம் மையங்களை தேடிச் சென்று பணம் எடுப்பதும் குறைந்து கொண்டே வருகிறது.

   

ஏதாவது ஒரு சிறிய பொருள் வாங்கினால் கூட உடனே ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பி விடுகின்றனர். இதனால் சில்லறை பிரச்சினை மட்டுமல்லாமல் நேரமும் மிச்சம் ஆகிறது. இவ்வாறு நாம் பணம் அனுப்பும்போது தவறுதலாக தெரியாத ஒரு நபருக்கு பணம் செலுத்தி விட்டால் அதனை எவ்வாறு திரும்ப பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   
  • ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி தவறான பண பரிமாற்றம் நடந்து விட்டால் 24 முதல் 48 மணி நேரத்தில் உங்களுடைய பணத்தை நீங்கள் திரும்ப பெறலாம்.
  • குறிப்பாக பணம் பெறுபவர் மற்றும் செலுத்துபவர் இருவரும் ஒரே வங்கியாக இருந்தால் மிகவும் விரைவில் பணத்தை திரும்ப பெற முடியும்.
  • ஆனால் இரண்டு வங்கி கணக்குகளும் இரண்டு வேறு வங்கிகளில் இருந்தால் பணத்தை பெற அதிக நேரம் எடுக்கும்.
  • பணம் தவறாக அனுப்பியவரை நீங்கள் தொடர்பு கொண்டும் பயனில்லை என்றால் உடனே வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
  • நீங்கள் தவறாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற சில வங்கிகள் transaction re-call என்ற அம்சத்தை வழங்குகிறது.
  • இதில் ஏதோ ஒரு வழிமுறையில் உங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கியின் NPCI portal இணையதள பக்கத்தில் புகார் அளிக்கலாம்.
  • அதற்கு npci.org.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று What we do என்ற பக்கத்திற்குச் சென்று, UPI தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான பரிவத்தனைக் குறித்த விவரங்களைப் பதிவிடவும்.
  • பிறகு புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.
  • இதனை  செய்தால் சில மணி நேரத்தில் பணம் திரும்ப வந்துவிடும்.