தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த படபிடிப்பு நிறைவடைய உள்ளது. கடந்த வருடம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படபிடிப்பு தொடங்கிய நிலையில் படத்தை தீபாவளி ரிலீஸ் ஆகக் கொண்டு வர பட குழுவினர் திட்டமிட்டு அதற்கு ஏற்ப செயல்பட்டு வருகிறார்கள்.

இருந்தாலும் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் ரிலீஸ் ஆகும் எனக் கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் பிரபலம் ஆரவ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில் இவர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் பட குழுவினர் அடுத்தடுத்து வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று படத்தின் மற்றொரு நடிகரான நிகில் நாயரின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர்கள் அனைத்தும் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நிறைவடையாத நிலையில் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

ரோடு டிராவலை மையமாக கொண்டு விடாமுயற்சி திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் எடிட் செய்யப்பட்ட பகுதிகளை சில நாட்களுக்கு முன்பு பார்த்த நடிகர் அஜித், காட்சிகளை மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கி உள்ளதாக மகிழ் திருமேனிக்கு பாராட்டுகளை தெரிவித்தார். ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதாகவும் அஜித் பாராட்டியுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
