MGR- ரிடம் காதலைச் சொன்ன ஸ்ரீவித்யா… அதுக்கப்பறம் என்ன நடந்துச்சு தெரியுமா…?

By admin on ஆவணி 16, 2024

Spread the love

ஸ்ரீவித்யா தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கர்நாடக பாரம்பரிய பாடகி எம் எல் வசந்தகுமாரி ஆகியோருக்கு பிறந்தவர் தான் நடிகை ஸ்ரீ வித்யா. ஒரு வித நோயால் பாதித்த அவரது தந்தை நடிப்பை நிறுத்த வேண்டியதாக ஆகிவிட்டது. அதனால் குடும்பம் வறுமைக்கு உள்ளானது. குடும்ப வறுமையை போக்க குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஸ்ரீவித்யா.

ஸ்ரீவித்யா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 40 வருடம் நடித்துள்ளார். 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீவித்யா. நடிப்பை தவிர ஸ்ரீவித்யா பின்னணி பாடகி யாவும் கர்நாடகா பாடகியாகவும் பணியாற்றினார். இவர் நன்கு பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடன கலைஞரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

   

நடிகர் சிவாஜிகணேசன் உடன் இணைந்து 1967ஆம் ஆண்டு திருவருட்செல்வர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீவித்யா தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். 1970களில் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக புகழின் உச்சத்தில் இருந்தார் ஸ்ரீவித்யா. 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு முதல் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீவித்யா என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்ரீவித்யா சிறுவயதிலிருந்தே எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகையாக இருந்து வந்துள்ளார். அவரது படங்களை தேடி தேடி பார்ப்பாராம். ஸ்ரீவித்யா சிறுவயதாக இருந்த காலகட்டத்தில் அவரது வீட்டின் அருகே தான் நடன சகோதரிகளான லலிதா பத்மினி ராகினி ஆகியோர் வசித்து வந்தனாராம். அவர்கள் வீட்டிற்கு விளையாட செல்ல போகின்ற போது அவர்கள் ஸ்ரீவித்யாவிடம் உனக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டுள்ளனர். அதற்கு ஸ்ரீவித்யா எனக்கு எம்ஜிஆர் தான் ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்லி இருக்கிறார்.

உடனே லலிதா பத்மினி ராகினி ஆகியோர் எம்ஜிஆர் அவர்களுக்கு போன் செய்து ஸ்ரீவித்யாவிடம் கொடுத்து விட்டாராம். போனை வாங்கிய ஸ்ரீவித்யா ஐ லவ் யூ என்று எம்ஜிஆர் அவர்களிடம் கூறிவிட்டாராம். இதை அறிந்த எம்ஜிஆர் சிரித்து விட்டு போனை கட் செய்த பின்னர் ஸ்ரீவித்யாவை நேரில் வரவழைத்து பேசி அனுப்பினாராம்.