பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கியது இவர்தான்.. ஒரு நாளைக்கு இவ்வளவா?.. அவர் யார் தெரியுமா..?

By Nanthini on ஆவணி 15, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசன் அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கினார்.

   

இந்த நிலையில் தன்னுடைய திரைப்படப் பணிகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விளக்குவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில் இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

   

 

இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அதிக சம்பளம் வாங்கியது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை விசித்ரா தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளார்.

கடந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அவருக்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அவர் 97 நாட்கள் இருந்து வெளியேறியதால் அவருக்கு 29 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் பெற்ற போட்டியாளர் விசித்ரா என்ற தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.