தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் சௌந்தரராஜா. கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் முதலாக சசிகுமாரின் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய சௌந்தரராஜா சமீபத்திய தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் சிறப்பான வளர்ச்சியை எட்டி உள்ளார்.

கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் நடித்த சிலுக்குவார் பட்டி சிங்கம் ஆகிய இரண்டு திரைப்படங்களில் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். சிலுக்குவார் பட்டி சிங்கம் திரைப்படத்தில் ராஜா பாண்டி எம்எல்ஏவாக கெத்து, வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சௌந்தர்ராஜா நடித்திருந்தார்.

அடுத்தடுத்து இவர் பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவருக்கு அடுத்தடுத்து பல திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது பிசியான நடிகராக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் சௌந்தர்ராஜாவின் நெருங்கிய நண்பரான ஜெய்குமார் என்பவர் தனது மனைவியுடன் இணைந்து தனது நண்பர் சௌந்தர் ராஜாவுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது பழைய கார் என்றாலும் அதனை மாடிஃபிகேஷன் செய்து புதிய காராக தனது நண்பருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தை சௌந்தர்ராஜா வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
