தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கடந்த 2002- ஆம் ஆண்டு ரிலீசான துள்ளுவதோ இளமை படம் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், மரியான், தங்க மகன், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம். இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சுதீப் கிஷன், அபர்ணா பாலமுருளி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஜூலை 26-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகியது. 12 நாட்களில் படம் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.

உலக அளவில் ராயன் திரைப்படம் 126 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இயக்குனராகவும் தனுஷ் தனது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தியுள்ளார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. தனுஷின் உடன்பிறந்த அண்ணன் செல்வராகவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனுஷின் நெருங்கிய உறவினர் ஒருவர் ராயன் திரைப்படத்தில் நடித்திருப்பது உங்களுக்கு தெரியுமா? தனுஷின் சகோதரி கார்த்திகா. இவரது கணவர் கார்த்திக் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் கார்டியாலஜிஸ்ட் மருத்துவர் ஆவார். தனுஷின் சகோதரி கார்த்திகா தனது தம்பியின் ஐம்பதாவது படம் ராயனில் தனது கணவர் நடித்திருப்பது பெருமந்தம் அளிப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டார். கார்த்திகாவும் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

