பிக் பாஸில் கமலுக்கு அப்புறம் இவர்தான்.. தண்டனை குடுக்கிற தில்லு இவருக்கு தான் இருக்கு.. மேடையில் உளறிய கூல் சுரேஷ்..!!

By admin on ஆவணி 10, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. வெற்றிகரமாக முடிந்த பிக்பாஸ் 7 சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் இந்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவில்லை. இதனால் சிம்பு, சூர்யா, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சத்யராஜ் நடிப்பில் தோழர் சேகுவேரா திரைப்படம் உருவாகியுள்ளது.

   

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் விசிக தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிலையில் கூல் சுரேஷ் கூறியதாவது, நான் பிக் பாஸ் போயிட்டு வந்தது எல்லாருக்கும் தெரியும். கமல் சார் பிக்பாஸில் இருந்து விலகி விட்டார். இதனால் அடுத்து யாரை தொகுத்து வழங்க சொல்லலாம் என தீவிரமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எனக்கும் விஜய் டிவிக்கும் இன்னும் தொடர்பு இருக்கிறது பலருக்கு தெரியும்.

   

சத்யராஜின் தோழர் சேகுவேரா: க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு

 

விஜய் டிவில முக்கியமான பொறுப்பில் இருப்பவரிடம் நேற்று பேசிக்கொண்டிருந்தேன். அப்போ பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கினால் நல்லா இருக்கும்னு நான் அவர்கிட்ட கேட்டேன். அவரு தொல்.திருமாவளவன் சார் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என சொன்னாரு. ஏன்னு நான் கேட்டதுக்கு தொல்.திருமாவளவன் சாரிடம் நீதி இருக்கும். நேர்மை இருக்கும். உண்மை இருக்கும். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கும் தில் திருமாவளவன் சாரிடம் உள்ளது. என கூறினார்.

இது நடைமுறைக்கு வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவே.. ஏன் சட்டத்தை எழுதி அம்பேத்காரர் கூட தனது மாணவன் உலகமே கவனிக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரே என எழுந்து நின்று கை தட்டுவார். பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகத்தில் இருக்க எல்லாரும் பார்கிறாங்க. பிக் பாஸில் தவறு நடந்தால் அதனை தட்டிக் கேட்கும் தில் கண்டிப்பாக இருக்க வேண்டும். நான் தில் வேண்டும் என சொன்னேன். அதுக்காக கமல் சாருடன் இதை கோர்த்து பேசிடாதீங்க. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. கமல் சார் மிகவும் நல்லவர். இது விஜய் டிவில அவங்க பேசியதை நான் சொன்னேன். அவ்வளவுதான் என கூறியுள்ளார்.

Bigg Boss Tamil - பிக்பாஸ் 7 வீட்டுக்குள்ள போறது ஏழரை.. அலப்பறை கிளப்பிய  கூல் சுரேஷ் | Bigg Boss Tamil: Cool Suresh Speech in Bigg Boss 7 Grand  Opening - Tamil Filmibeat