அது என்னோட கனவு.. ஜெமினி படத்தில் நடித்ததற்கான காரணத்தை கூறிய சீயான் விக்ரம்..!!

By admin on ஆவணி 9, 2024

Spread the love

பிரபல நடிகரான விக்ரம் கடந்த 1999-ஆம் ஆண்டு ரிலீசான சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். முன்னதாக என் காதல் கண்மணி, காவல் கீதம், புதிய மன்னர்கள் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சேது திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி விக்ரமுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு விண்ணுக்கும் மண்ணுக்கும், தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், கிங், சாமி, பிதாமகன், அந்நியன், பீமா, கந்தசாமி, ராவணன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் விக்ரம் நடித்தார்.

   

விக்ரம் எப்போதும் வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார். தனது படத்தின் கதாபாத்திரத்திற்காக தன்னையே வருத்திக்கொண்டு முழு முயற்சியோடு தனது திறமையை வெளிப்படுத்துவார். அப்படி இருக்க கடந்த 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ஜெமினி திரைப்படம் ரிலீஸ் ஆனது.

   

 

சரண் இயக்கிய ஜெமினி திரைப்படத்தில் விக்ரம் கிரண் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்ரம் ஜெமினி படத்தில் நடித்த எப்படி ஒப்புக்கொண்டார் என பல பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விக்ரம் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து மசாலா படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

ரசிகர்களை ஓ போட வைத்த விக்ரம்.. ட்ரெண்டாகும் வீடியோ | Tamil cinema vikram  post goes viral

அதற்காக ஜெமினி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மேலும் ஏவிஎம் நிறுவனம் என்பது ஒரு வரலாறு. அந்த வரலாறில் நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காக நான் எத்தனை நாட்கள் கனவு கண்டிருப்பேன் என்பது எனக்கே தெரியாது. அப்படி இருக்கும்போது ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து நடிக்க வரும் வாய்ப்பை நான் தவற விடுவேனா என விக்ரம் கூறியுள்ளார்.

சேதுவாக இருந்த விக்ரம் ஜெமினியாக நடிக்க என்ன காரணம்? இதுல இவ்ளோ விஷயம்  இருக்கா? | why did vikram choose to act avm in gemini movie?