தளபதியை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்ட இயக்குனர் மாரி செல்வராஜ்… தற்பொழுது அவர் கைவசம் இருக்கும் பெரிய நடிகர்களின் படங்கள்…இதோ …

By santhoshinikarthik on ஆவணி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் மாரி  செல்வராஜ். அந்தப் படம் மூலமாக தனது திறமையை முழுமையாக வெளிக்காட்டினார். ஆகையால் தான் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் படத்தில் நடித்துள்ளார். அப்படம் வசூல் ரீதியாகவும்  வெற்றி பெற்றுள்ளது.

   

அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் வடிவேல் பகத் பாசில் போன்ற முன்னாடி நடிகர்களை வைத்து மாமன்னர் என்ற படத்தை இயற்றினார். இந்தப் படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதற்காக சமீபத்தில் பல விருதுகளையும் இப்படம் வென்றுள்ளது.

   

 

இந்நிலையில் மாரி செல்வராஜ்  மீண்டும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

அந்த லிஸ்ட் இதோ அதாவது வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிகிலா விமல் ,திவ்யா துரைசாமி போன்றோர்  நடித்துள்ள வாழை என்ற படம் வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சீயான் விக்ரம் அவர்களின் மகனான துருவ்  விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். பைசன் படம் நிறைவடைந்த உடன் மீண்டும் தனுஷை வைத்துபடம்  இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கங்குவா ,சர்தார் 2, மெய்யழகன், வா வாத்தியார் ,கைதி 2 போன்ற படங்களுக்கு கமிட் ஆகி இருக்கும் நடிகர் கார்த்தியை வைத்தும் மாரி செல்வராஜ் படம் இயக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு கார்த்தியும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பரியேறும் பெருமாள்  படத்திற்கு  பிறகு  மாரி செல்வராஜின் இயக்கம்  நடிகர் ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்திருப்பதால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்பொழுது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் இப்படம் முடிந்தவுடன்  பிறகு மாரி செல்வராஜிற்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜிற்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் ஆனால்  அவருடன் இணைந்து படம் இயக்குவதற்கான வாய்ப்பை தவறவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு முறை விஜய் இடம் கதை சொன்ன பொழுது அவர் ரசிகரின் பார்வையில் இருந்து ஒரு கதையை ரெடி பண்ணி கொண்டு வாருங்கள் என்று மாரி செல்வராஜிடம் கூறிவிட்டாராம்.

அதுபோன்ற கதையை உருவாக்குவதற்குள் நடிகர் விஜய் அரசியலில் இறங்கி உள்ளார். ஆகையால் தளபதி 69 படம் தான் நடிகர் விஜயின் நடிப்பில் வெளிவரும் இறுதி படம் எனவும் கூறியது மாரி செல்வராஜிற்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் .