நடிகை வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து திரையுலகில் கலந்து பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு மாணிக்கம் திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் தான் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். அதன்பிறகு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக வனிதா விஜயகுமார் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
)
அதன் பிறகு இரண்டு திருமணங்கள் செய்தார். அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். இப்போது அடுத்தடுத்த படங்களில் வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். பிரசாந்த் நடிப்பில் ஒன்பதாம் தேதி அந்தகன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்திலும் மனித முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் வைஜெயந்தி ஐபிஎஸ் படத்திலும் மனிதா நடித்துள்ளார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு பவர் ஸ்டார் சீனிவாசன் வருகை தந்த நிகழ்ச்சியில் பேசிய பவர் ஸ்டார் வனிதா எனக்கு நெருக்கமான தோழி எனக்கு கூறினார். அதனைக் கேட்ட வனிதா நான் வெளியூருக்கு போனால் நீங்கள் பவர் ஸ்டார் பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டீர்களா என கேட்கிறார்கள். இல்லை இல்லை நான் பவர் ஸ்டார் சீனிவாசனை தான் திருமணம் செய்திருக்கிறேன் என சொல்வேன்.
![]()
உங்களை திருமணம் செய்து ஒன்னும் நடக்கவில்லை என கிண்டல் செய்தார். உடனே பவர் ஸ்டார் என்ன செய்வது நீங்கள் தாய்லாந்து போயிடுறீங்க. நானும் இங்கு இருப்பதில்லை. ஒரு நாள் ஹனிமூனுக்கு நாள் குறித்து விடலாம் என கூறினார். இருவரது உரையாடல்கள் தான் இப்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புஸ்ரீனிவாசனும் வனிதாவும் மாலை போடுவது போல ஒரு போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
View this post on Instagram
