தீர்க்கதரிசி ஆன சிவாஜி… ரஜினியிடம் கேட்ட ஒற்றைக் கேள்வி…

By admin on ஆவணி 4, 2024

Spread the love

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. ஒரு காலத்தில் தனது நடிப்பினால் தமிழ் சினிமாவையே கட்டி போட்டு இருந்தவர். இவர் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் மிகவும் நேர்த்தியாக நடிப்பவர் சிவாஜி கணேசன்.

சிவாஜி கணேசன் அவர்களின் இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்பதாகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன்,1952 ஆம் ஆண்டு ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறமையாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் சிவாஜி கணேசன். தமிழ் திரையுலகில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தான்.

   

   

நல்ல குரல் வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, அபாரமான நடிப்பு ஆகியவை சிவாஜி கணேசன் அவர்களின் சிறப்புகள் ஆகும். நடிகர் திலகம், நடிப்பு சக்கரவர்த்தி, சிம்ம குரலாளர் என பல புனைப்பெயர்கள் இவருக்கு உண்டு. சரித்திரம், புராணம், குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்தவர் சிவாஜி கணேசன். சர்வதேச அளவில் 1960 ஆம் ஆண்டு எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்தியர் சிவாஜி கணேசன். இந்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது ஆகிய விருதுகளை வென்றவர் சிவாஜி கணேசன். செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தனது அபாரமான நடிப்பின் மூலம் மட்டுமே சிவாஜி கணேசன் பிரபலமடையவில்லை. கருணை வள்ளலாக நாட்டின் நலனுக்காக அவர் அள்ளி கொடுத்ததன் மூலம் பிரபலமானார். கல்விக்கூடங்கள் கட்டுவதற்கும் 1959 இல் மதிய உணவுத் திட்டத்திற்கு பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். இன்றைய மதிப்பில் அது ஒரு கோடி ஆகும். அது மற்றுமின்றி தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ஒரு லட்சமும், 1960 இல் சென்னையை பெருவெள்ளம் சூழ்ந்த போது அன்றைய முதலமைச்சர் காமராஜர் முன்னிலையில் ஒரு லட்சம் உணவு பொட்டலங்களை அவர் இல்லத்தில் தயாரித்து வழங்கியுள்ளார். கூடவே 800 மூட்டை அரிசியும் தானமாக வழங்கியிருக்கிறார் சிவாஜி கணேசன். ஒரு நடிகனாக தன்னை தூக்கி விட்ட தமிழக மக்களுக்காக கைமாறாக பல நன்மைகளை செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் படையப்பா. 1999 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் ரஜினிகாந்த் அவர்களின் கேரியரில் மிக முக்கியமான இடத்தை பிடித்தது. வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிப்பதற்கு கேட்டபோது சிவாஜி கணேசன் உடல்நலம் முடியாமல் இருந்தாராம். ரஜினிகாந்த் அவர்கள் நேரில் சென்று கேட்டுக் கொண்டதன் பேரில் நடிக்க சம்மதித்தாராம் சிவாஜிகணேசன்.

அப்படி படையப்பா படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் அவர்களிடம் ஒரு பெரிய கேள்வியை கேட்டிருக்கிறார் சிவாஜி கணேசன். அவர் கூறியது என்னவென்றால், ரஜினி எனக்கு ரொம்ப உடம்பு முடியலப்பா நான் திடீர்னு செத்தாலும் செத்துருவேன். நான் இறந்துட்டோம்னா என்னோட இறுதி ஊர்வலத்தில் முதல் ஆளா நீ வந்து நிற்பாயா என்று கேட்டிருக்கிறார் சிவாஜி கணேசன். அந்த கேள்வியை கேட்டு ரஜினிகாந்த் ஒரு நிமிடம் திகைத்து போய், என்னப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது அப்படின்னு பதில் சொல்லி இருக்கிறார். இல்லப்பா எல்லாரும் ஒரு நாள் போய் சேர தானே போறோம். திடீர்னு நான் இறந்துட்டேனா நீ வேற பிஸியா ஷூட்டிங் ல இருக்க சூட்டிங் அங்கங்க போவ, திடீர்னு இமயமலைக்கு போயிடுவ, அதான் நான் இறந்துட்டன்னா என் இறுதி உலகத்தில நீ வருவியானு நான் கேட்டேன் அப்படின்னு சொல்லி இருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதற்கு ரஜினிகாந்த் கண்டிப்பா நான் எங்க இருந்தாலும் வந்துருவேன் பா அப்படின்னு பதில் சொல்லி இருக்கார். அதேபோல் படையப்பா படம் வெளியான 2 ஆண்டுகளிலேயே சிவாஜி கணேசன் 2001 ஆம் ஆண்டு காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் முதல் ஆளாக கலந்து கொண்டு எல்லா சடங்குகள் முடியும் வரையிலும் அங்கே இருந்தாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தீர்க்கதரிசியாக தனது இறப்பை முன்பே கணித்து ரஜினியிடம் மிகப்பெரிய கேள்வியை கேட்டுள்ளார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.