தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் படங்களுக்கு பாடல்கள் மட்டும் எழுதாமல் கதை வசனமும் எழுதியுள்ளார்.
50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.
அவரின் ஆரம்ப கால பாடல்கள் பெரும்பாலும் எம் ஜி ஆருக்காக எழுதப்பட்டவை. அந்த பாடல்களில் கவிரசம் சொட்ட சொட்ட எழுதி ரசிகர்களை தேனில் விழுந்த வண்டை போல கிறங்கடித்திருப்பார். அப்படி ஒரு பாடலைப் பற்றியும் அதில் கண்ணதாசன் பயன்படுத்தியுள்ள ஒரு கவித்துவமான நுட்பத்தையும் பார்க்கலாம்.
அப்படிதான் எல்லாக் கடவுள்களைப் பற்றியும் பாடல்கள் இருக்கிறதே, ஆனால் கண்ணனைப் பற்றி பாடல்கள் இல்லையே என்று நினைத்த ஏவிஎம் நிறுவனம் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் வரிகளில் 8 கண்ணன் பாடல்களை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக கண்ணதாசனை தொடர்பு கொண்டபோது தன்னுடைய கல்யாண மண்டபத்துக்கு வர சொல்லியுள்ளார். அவர்கள் சென்ற போது கல்யாண விருந்தை முடித்துவிட்டு அசதியில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்து இப்போது பாடல்கள் கிடைக்குமா என தயங்கி நின்றுள்ளனர் ஏவிஎம் தயாரிப்பாளர்கள்.
ஆனால் அவர்கள் ஆச்சர்யப்படும் வகையில் அடுத்த 2 மணிநேரத்தில் 8 பாடல்களை எழுதிக் கொடுத்துவிட்டாராம் கண்ணதாசன். அந்த பாடல்களை எல்லாம் ட்யூன் செய்து 2 நாட்களில் ரெக்கார்ட் செய்தாராம் எம் எஸ் விஸ்வநாதன். அப்படி உருவான பாடல்கள் இன்றளவும் கிருஷ்ண பக்தர்களால் கேட்கப்படும் பாடல்களாக உள்ளன. அதில் ஒரு பாடல்தான் புல்லாங்குழல் கொடுத்த மூங்கிள்களே என்ற பாடல்.
