இவன் என்னடா எனக்கே சீன் சொல்றான்… பாக்யராஜிடம் கோபப்பட்ட பாரதிராஜா… அப்படி என்ன சொன்னார் சுந்தர்ராஜன்!

By vinoth on ஆடி 31, 2024

Spread the love

ஆர். சுந்தர்ராஜன், டைரக்டர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் 80 களில் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். இயக்குனர் பாக்யராஜும் இவரும் கல்லூரி தோழர்கள். பயணங்கள் முடிவதில்லை என்ற சில்வர் ஜூப்ளி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சுந்தர்ராஜன்.

அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச்சிமிழ், ராஜாதி ராஜா போன்ற படங்களை இயக்கி தன்னை முன்னணி இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார். அமைதிப்படை, சூர்யா வம்சம், தசாவதாரம், நட்புக்காக, ஜானகிராமன், லிங்கா என பல படங்களில் அப்பா, அண்ணன், தாத்தா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

   

இவர் இயக்குனர் பாக்யராஜின் பள்ளித் தோழன். இவரும் பாக்யராஜும் சேர்ந்து மேடை நாடகங்கள் போட்டுள்ளனர். ஆனால் அதன் பின்னர் பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து இயக்குனர் ஆகி முன்னணி நடிகராகவும் ஆகிவிட்டார். அவரைப் போல தானும் இயக்குனர் ஆகவேண்டுமென்ற ஆசையோடு சுந்தர்ராஜன் சென்னைக்கு வந்து பாக்யராஜைப் பார்த்துள்ளார்.

   

தன் நண்பனை எப்படி இயக்குனர் ஆக்கிவிட வேண்டும் என்று பாரதிராஜாவிடம் சேர்த்துவிடலாம் என நினைத்துள்ளார். அப்போது தன்னை பார்க்க பாரதிராஜா வரவிருந்த ஒரு நாளில் இவரையும் வரவழைத்துள்ளார். இரண்டு பேரும் வந்த போது பாக்யராஜ் குளிக்க சென்றுவிட்டாராம்.

 

குளித்துவந்து பார்த்தால் பாரதிராஜா கோபமாக சுந்தர்ராஜனை திட்டிக் கொண்டிருந்தாராம். பாரதிராஜாவிடம் பேச்சுக்கொடுத்த சுந்தர்ராஜன் “உங்க படத்துல இந்த சீன இப்படி மாத்தி வச்சிருக்கலாம். அந்த சீன் அந்த குறை இருக்கு’ என விமர்சிக்க ஆரம்பித்தாராம். அதைக் கேட்ட பாரதிராஜா “யார்றா இவன் எனக்கே சீன் சொல்றான்” எனக் கோபித்துக் கொண்டாராம்.

இதையறிந்த பாக்யராஜ் தனது குருநாதரை சமாதானப்படுத்தி சுந்தர்ராஜனின் திறமையை எடுத்து சொல்லி அவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தாராம்.