நடிகை ரட்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரட்சிதா மகாலட்சுமி.

அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார். அது மட்டும் இல்லாமல் ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள், கலர்ஸ் தமிழில் அம்மன் உள்ளிட சீரியல்களிலும் இவர் நடித்து வந்தார்.

மேலும் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்து வந்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

தனது கணவரை பிரிந்த பிறகு சீரியல்களிலும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வரும் ரட்சிதா தொடர்ந்து கிளாமர்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

முன்பெல்லாம் குடும்ப பங்கான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் .

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருவார். அந்த வகையில் கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

