இந்தியன் 2 திரைப்படம் தற்போது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படம் திரையரங்குகளில் கடந்த ஜூலை 12-ம் தேதி வெளியாகி படுமோசமான விமர்சனங்களை பெற்று வருகின்றது. பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

ஏனென்றால் 28 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் இந்தியன் 2 திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள்., கமலஹாசன் இந்த திரைப்படத்தில் மிகச்சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் கதை மக்களிடையே அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
படம் வெளியான நாள் முதலே தொடர்ந்து நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருவதால் தோல்விகளையே சந்தித்திருக்கின்றது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கின்றது. ஏற்கனவே லைக்கா நிறுவனம் ஏகப்பட்ட தொடர் தோல்விகளை கொடுத்து மிகப்பெரிய சிக்கலில் இருக்கும் நிலையில் இப்படம் கை கொடுக்கும் என்று மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்தார் சுபாஸ்கரன்.
ஆனால் அந்த நம்பிக்கையை தவிடு பொடி ஆக்கிவிட்டது.இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூலை செய்திருந்தாலும் அடுத்ததடுத்த நாட்களில் வசூல் குறைய தொடங்கியது ஒன்பது நாட்களில் இப்படம் செய்திருக்கும் வசூல் தொடர்பான விவரம் வெளியாகி இருக்கின்றது. அதன்படி உலகளவில் இந்தியன் 2 திரைப்படம் கடந்த 9 நாட்களில் ரூபாய் 148 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து இருக்கின்றது.

தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த திரைப்படம் லாபகரமான படம் தான் என்று கூறி வந்தாலும், திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் தோல்வி படமாக தான் அமைந்திருக்கின்றது சங்கர் இயக்கத்திலேயே இவ்வளவு மோசமான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் இந்தியன் 2 தான்.
