25 வருஷ சினிமாவில் 22 படம் நடிச்சிருக்கேன்.. ஆனா ஒருத்தருக்கு கூட என்னை அடையாளம் தெரியல.. மனம் திறந்து பேசிய சிங்க பெண்ணே சீரியல் கருணாகரன்..!!

By admin on ஆடி 19, 2024

Spread the love

பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தம்பி சந்திரகாந்த்தும் நடிகர் ஆவார். சுகன்யா நடிப்பில் ரிலீசான அன்று கண்ட முகம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். சந்திரகாந்த் விஜய் நடிப்பில் ரிலீசான மின்சார கண்ணா திரைப்படத்தில் விஜயின் அண்ணனாக இவர்தான் நடித்திருந்தார். குஷ்புவின் வீட்டில் கூர்கா வேடத்தில் நடித்திருந்தார்.

singapenne serial cast sun tv singapenne serial villan singapenne karunakaran - சிங்கப்பெண்ணே சீரியல் வில்லன் யார்? | பொழுதுபோக்கு News, Times Now Tamil

   

சின்னத்திரை சீரியல்களிலும் சந்திரகாந்த் நடித்துள்ளார். முதன் முதலில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரிலீசான மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இந்தியன் திரைப்படத்தில் நெடுமுடி வேணு என்ற கேரக்டரில் நடித்தார். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் கருணாகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

 

குடும்ப சூழ்நிலையால் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஆனந்தி கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு சேர்கிறார். அப்போது வில்லனான சந்திரகாந்த் எப்போதும் ஆனந்தியை திட்டிக் கொண்டே இருக்கிறார். அவரது கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல வருடங்கள் கழித்து இவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் மின்சார கண்ணா திரைப்படத்தில் விஜய் கண்ணனாக நடித்தவராக இது என வியந்து வருகின்றனர்.

கமல் சாருக்குக் கிடைக்கல; எனக்குக் கிடைச்சது!'' - `சிங்கப்பெண்ணே' ரீ-என்ட்ரி குறித்து ஶ்ரீகாந்த்|singapenne serial actor srikanth talks about his reentry in tamil serial ...

சமீபத்தில் சந்திரகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் 25 வருஷமா சினிமாவில் இருக்கேன் இதுவரைக்கும் 22 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என்ன நிறைய பேருக்கு அடையாளம் தெரியாது. இப்ப சிங்க பெண்ணே சீரியல் நடிச்சதுக்கு பிறகு யாராயிருந்தாலும் என்ன பார்த்து பாராட்டுறாங்க. என் கூட செல்ஃபி எடுக்குறாங்க. வெள்ளித்திரை படங்களை விட சின்னத்திரை சீரியல்கள் ஈஸியாக மக்கள் மனதில் நுழைந்து விடுகிறது என கூறியுள்ளார்.

#image_title