இந்த முறையும் சன் டிவியை ஓரங்கட்டிய விஜய் டிவியின் டாப் சீரியல்.. டிஆர்பி-ல் இடம் பெற்ற சீரியல்கள் லிஸ்ட்..!

By Mahalakshmi on ஆடி 19, 2024

Spread the love

டிஆர்பி ரேட்டிங்கில் இந்த வாரம் எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடித்திருக்கின்றது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

கடந்த சில வாரங்களாகவே சிறகடிக்க ஆசை சீரியல்தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கின்றது. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. 8 .92 ரேட்டிங்கை பெற்று சிறகடிக்க ஆசை சீரியல் தான் முதலிடத்தில் இருக்கின்றது. சன் டிவியில் எப்போதும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த சிங்கப் பெண்ணே சீரியல் தற்போது 8.18 ரேட்டிங்கை பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

   

   

இதை எடுத்து கயல் சீரியல் 7.78 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றது. இதை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 7.65 ரேட்டிங்கை பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கின்றது. ஐந்தாவது இடத்தை விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தான் பிடித்திருக்கின்றது.

 

இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதால் 7.47  புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தை தக்க வைத்துள்ளது .ஆறாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் 7.16 புள்ளிகளை பெற்றிருக்கின்றது .எட்டாவது இடத்தில் மல்லி சீரியல் மற்றும் ஒன்பதாவது இடத்தில் சுந்தரி பத்தாவது இடத்தில் சின்ன மருமகள் சீரியல் இடம் பெற்று இருக்கின்றது.

#image_title

எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சன் டிவி சீரியல் தற்போது சற்று சறுக்களை சந்தித்து வருகின்றது. எதிர்நீச்சல் சீரியல் இருக்கும் வரை அந்த சீரியல்தான் எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும். அந்த சீரியல் முடிவடைந்ததற்கு பிறகு சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியல் மட்டும் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கின்றது. கயல் சீரியல் முதலில் விறுவிறுப்பாக இருந்தாலும் தற்போது அரைத்த மாவை அரைத்து வருகிறார்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள்.