முடிவுக்கு வந்த 4 வருட திருமண வாழ்க்கை.. காதல் மனைவியுடனான விவாகரத்தை அறிவித்தார் ஹர்திக் பாண்டியா..!!

By admin on ஆடி 19, 2024

Spread the love

ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் நட்சத்திர போட்டியாளர் ஆவார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவும் செர்பிய நடிகை மற்றும் மாடல் அழகியான நடாஷா ஸ்டோன்கோவிக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ளார்.

தீயாய் பரவிய தகவலுக்கு முற்றிப்புள்ளி வைத்த ஹர்திக் பாண்டியா - உறுதியானது விவாகரத்து! - லங்காசிறி நியூஸ்

   

கடந்த சில நாட்களாகவே ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தது. அதற்கு ஏற்றவாறு நடாஷா தனது பெயருக்கு பின்னால் இருந்த பாண்டியன் என்ற பெயரை நீக்கினார். மேலும் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிவிட்டார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவும் நடாஷாவும் சேர்ந்து தங்களது விவாகரத்து குறித்து அறிவித்துள்ளனர்.

   

மனைவியை விட்டு பிரிந்தாரா ஹர்திக் பாண்டியா ? தீயாய் பரவும் தகவல் - லங்காசிறி நியூஸ்

 

T20 உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய ஹர்திக் பாண்டியாவிற்கு அவரது சகோதரர் குர்னால் பாண்டியா மற்றும் மகன் அகஸ்தியா உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்பு கொடுத்தனர். அங்கு நடாஷா இல்லை. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, நான்கு வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு நானும் நடாஷாவும் சேர்ந்து முடிவெடுத்து பிரிந்து செல்கிறோம். ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு முயற்சிகள் எடுத்தோம். ஆனால் அது முடியவில்லை. இந்த முடிவுதான் எங்களுக்கு சிறந்தது என நம்புகிறோம்.

விவாகரத்து செய்தால், ஹர்திக் பாண்டியா மனைவி நடாசாவுக்கு 70% சொத்து போகுமா? "பிரியமானவளே" அக்ரிமென்ட் | ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ...

நாங்கள் ஒன்றாக அனுபவித்த மகிழ்ச்சி, பரஸ்பரம் மரியாதை, தோழமை என்றும் அப்படியே இருக்கும். இது ஒரு கடினமான முடிவு. எங்கள் வாழ்க்கை மையத்தில் அகஸ்தியா தொடர்ந்து இருப்பார். அவரது மகிழ்ச்சிக்காக எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம். தொடர்ந்து நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். எங்களை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஹர்திக் பாண்டியா - நடாஷா ஜோடி விவாகரத்து? | Hardik wife Natasa Stankovic Remove Pandya Surname Sparks Separation Rumour Social Media