தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிற்பி. 90’ஸ் காலகட்டத்தில் ஏகப்பட்ட திரைப்படத்திற்கு பல பாடல்களை இசையமைத்திருக்கின்றார். இவர் இசையில் வெளியான பல பாடல்கள் இன்றளவும் 90 கிட்ஸ் களின் பேவரட் லிஸ்டில் இருக்கும். ஆனால் பலருக்கும் தெரியாது அந்த பாடலை இசை அமைத்தவர் இவர்தான் என்று, நாராயணன் என்ற இயற்பெயரை திரைப்படங்களில் இசையமைக்க தொடங்கியதற்கு பிறகு சிற்பி என்று மாற்றிக் கொண்டார்.
மனோ பாலா இயக்கிய செண்பகத் தோட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரின் மூன்றாவது திரைப்படம் தான் கோகுலம். இயக்குனர் விக்ரமன் தான் இவருக்கு சிற்பி என்று பெயர் வைத்ததாக அவர் பலமுறை தெரிவித்து இருக்கின்றார். இவர் இசையமைத்த சில பாடல்களைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

முதலாவதாக சரத்குமார் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான மூவேந்தர் திரைப்படத்தில் நான் வானவில்லையே பார்த்தேன்.. அதை காணவில்லையே வேர்த்தேன்.. என்ற பாடலை இசை அமைத்தது இவர்தான். அதைத்தொடர்ந்து சூர்யா மற்றும் சினேகா, லைலா ஆகியோர் நடிப்பில் வெளியான உன்னை நினைத்து திரைப்படத்தில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா என்ற பாடலை இசை அமைத்தது இவர்தான்.
ஆக்சன் கிங் அர்ஜுன், பானுப்ரியா நடிப்பில் வெளியான கோகுலம் திரைப்படத்தில் ஊதாவில் மின்னல்கள் உனது அழகினை படம் வரைந்திட.. என்ற பாடலை இசை அமைத்தது இவர்தான். சரத்குமார், குஷ்பூ நடிப்பில் வெளியான நாட்டாமை திரைப்படத்தில் கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும் இந்த பாடலை இசை அமைத்தது சிற்பி தான்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிப்பில் வெளிவந்த வருஷம் எல்லாம் வசந்தம் திரைப்படத்தில் எங்கே எந்தன் வெண்ணிலா.. என்ற பாடலை இசை அமைத்ததும் இவர்தான். இப்படி பழகிட்டு பாடல்களை இசையமைத்தது இவர்தான். ஆனால் இதுவரைக்கும் இது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கின்றது.
