போடுறா வெடிய.. ரிலீஸ் தேதியை லாக் பண்ண அமரன் பட குழு.. செம குஷியில் ரசிகர்கள்…!!

By admin on ஆடி 17, 2024

Spread the love

சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல முன்னணி இயக்குனர்களும் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க முன் வருகின்றனர்.

அமரன்: வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் கதை | Sivakarthikeyan next movie titled  as amaran - hindutamil.in

   

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஏலியன்ஸ் சப்ஜெக்டை வைத்து உருவான அயலான் திரைப்படம் சிறு வயது பிள்ளைகளை வெகுவாக கவர்ந்தது. அதே நேரம் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

   

அமரன் வெளியீடு எப்போது?

 

ஆனால் அயலான் திரைப்படம் தான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்துள்ளார். முன்னாள் இந்திய ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு மையமாகக் கொண்டு அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது.

அமரன்' இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவு | 'Amaran' final shoot completed

ஏற்கனவே ரங்கூன் படத்தின் மூலம் மக்களிடையே வரவேற்பை பெற்ற ராஜ்குமார் பெரியசாமி அமரன் திரைப்படத்தை இயக்கியதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி அமரன் படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அமரன் படத்திற்கு ஆரம்பமே பெரிய சிக்கல்.. கமல், சிவாவுக்கு இஸ்லாமிய  அமைப்புகள் போர்க்கொடி ஏன்? | why did Islamic Organizations Protest to Ban  Amaran Movie in Tamil Nadu ...