உன் மூஞ்சி குழந்தை மாதிரி இருக்கு.. எனக்கு ரொமான்ஸ் வர மாட்டேங்குது.. பிரபல நடிகையிடம் ஓப்பனாக சொன்ன சிவாஜி..!!

By admin on ஆடி 16, 2024

Spread the love

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1968-ஆம் ஆண்டு கலாட்டா கல்யாணம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் முதன்முறையாக சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்துள்ளார். கலாட்டா கல்யாணம் படத்தில் சிவாஜி உடன் நடித்த அனுபவம் குறித்து ஜெயலலிதா பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ளார்.

கலகல 'கலாட்டா கல்யாணம்'; சிவாஜியும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல்படம்! | galatta kalyanam sivaji - hindutamil.in

   

ஜெயலலிதா கூறியதாவது, நான் பலமுறை என் அம்மாவுடன் சிவாஜி பட ஷூட்டிங்கிற்கு சென்றிருக்கிறேன். அப்போது அவர் என் கன்னத்தை தட்டி பாப்பா எனக்கூறி கொஞ்சுவார். அவருடன் நான் ஏற்கனவே பேசி பழகியதால் கலாட்டா கல்யாணம் படத்தில் அவருடன் சேர்ந்து ஒன்றாக நடிக்கும் போது எனக்கு எந்த தயக்கமும் ஏற்படவில்லை.

   

Galatta Kalyanam 1968 Full Movie Online - Watch HD Movies on Airtel Xstream Play

 

ரொம்ப நாள் பழகிய ஒருவருடன் நடிப்பது போல தான் நான் நடித்தேன். சிவாஜி காதல் காட்சியில் என்னுடன் நடிக்க ஆரம்பித்தபோது முதலில் சீரியஸ் ஆக தான் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவரால் அது முடியாமல் தன்னை மறந்து சிரித்துவிட்டார். ஏன் என்னை பார்த்து சிரிக்கிறீங்க என கேட்டேன். அதற்கு சிவாஜி உன்னோட உணர்ச்சிபூர்வமா காதல் காட்சிகள் நடிக்கணும்னா நான் நினைக்கிறேன்.

கலகல 'கலாட்டா கல்யாணம்'; சிவாஜியும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல்படம்! | galatta kalyanam sivaji - hindutamil.in

ஆனா உன் முகத்தை பார்க்கும் போது குழந்தையோட இணைந்து காதல் காட்சியில் நடிக்கிற மாதிரி எனக்கு தோணுது. அதனால்தான் என்னை மீறி நான் சிரித்து விட்டேன் என சிவாஜி கூறினார். இன்று வரை படத்தில் அந்த காட்சிகளை பார்த்தால் சிவாஜி தயங்கி நடிப்பது போல இருக்காது. அவ்வளவு அழகாக நடித்திருப்பார். சிவாஜி நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது என ஜெயலலிதா கூறியுள்ளார்.

Former chief minister J Jayalalithaa's old clicks see photos | Jayalalithaa | கருப்பு வெள்ளை காலத்து ஜெயலலிதா.! நினைவு கிளறும் புகைப்படங்கள்!