இந்த விஷயம் நடக்கலனா கண்கானா இடத்திற்கு போயிரலாம்னு முடிவு எடுத்தேன்.. நடிகர் பார்த்திபனின் இணையதளப்பதிவு வைரல்..!!

By admin on ஆடி 14, 2024

Spread the love

பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் ஆர்வம் மிக்கவர். பார்த்திபன் இயக்கத்தில் உருவான டீன்ஸ் திரைப்படம்  திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 13 இளம் வயதினரை மையமாக வைத்து சாகசம் நிறைந்த திரில்லர் கதையாக டீன்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது.

Actor Parthiban informed that the face is red due to corona vaccination | முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்

   

டீன்ஸ் படத்தின் திரை கதையும் இசையும் பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. அனைத்து இடத்திலும் லாஜிக்கை கரெக்டாக யோசித்து படமாக்கியுள்ளார் பார்த்திபன். இன்றைய தலைமுறை நகருக்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக டீன்ஸ் திரைப்படம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பார்த்திபன் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

   

தன் படத்திற்கு தானே வரிவிலக்கு அளித்த பார்த்திபன்

 

அதில் கூறியதாவது, சத்தியமா சொல்றேன் டீன்ஸ் படத்திற்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடமிருந்து கிடைக்கலன்னா நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காண இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமாக கொடுக்கிற பாராட்டில நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்துல அழுவது உங்களுக்கு கேட்க வாய்ப்பே இல்ல. இது போதாது.

Teenz Issue: `ஏமாற்றியது யார்?' கிராபிக்ஸ் விவகாரத்தில் பார்த்திபன் - சிவபிரசாத் சொல்வது என்ன? |teenz movie vfx issue explained by vfx artist and parthiban - Vikatan

இன்னும் ஆதரவு தந்து பலரும் பார்க்க உதவி செஞ்சு என்னை சந்தோஷத்தில் சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு Science fiction & fantasy thought- ல் எடுக்கப்பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும். நன்றி: பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு, வரம்: வரவிருக்கும் தூய்மையான வெற்றி, நனைந்த இமைகளோடு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.