இளம் நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி கலந்த 2019-ஆம் ஆண்டு ரிலீசான சூப்பர் 30 என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். நடிக்க ஆரம்பிக்கும் போது கீர்த்தி செட்டிக்கு வயது 16. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட கஸ்டடி, தி வாரியர் ஆகிய திரைப்படங்களில் கீர்த்தி செட்டி நடித்துள்ளார். தமிழில் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வா வாத்தியாரை திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்திலும் கீர்த்தி செட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.

இது மட்டுமில்லாமல் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் ரிலீசான உப்பண்ணா திரைப்படம் கீர்த்தி ஷெட்டியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் அவருக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கருப்பு நிற மார்டன் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோ சூட் நடத்தி போட்டோஸை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதனைப் பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

