பி ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 1965 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் உருவான முதல் கலர் திரைப்படம் இதுதான். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

படத்தில் இடம்பெற்ற கூர்மையான புத்திசாலித்தனமான வசனங்களுக்கு சொந்தக்காரர் ஆர்.கே சண்முகம். மருத்துவராண எம்ஜிஆர் மக்களின் அவலங்களையும், அரசியல் சூழ்ச்சிகளையும் பற்றி பேசிய வசனங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் இந்த படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
![]()
கண்ணதாசன் வாலி ஆகியோர் இணைந்து இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களை எழுதியுள்ளனர். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் தான் ஜெயலலிதா அறிமுகமானார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஜெயலலிதாவுக்கு இரண்டாவது படம். இந்த படத்தில் ஜெயலலிதா எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்தார். எம்ஜிஆர் மட்டும் இல்லாமல் ஜெயலலிதாவின் திரை அரசியல் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் உண்டானது.

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு எம். ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்தனர். கடலுக்குள் வைத்து மிகவும் பிரம்மாண்டமாக படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் காட்சிகளை உருவாக்க 3 கேமராக்களை பயன்படுத்தி உள்ளனர். மாபெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி வெள்ளிவிழா கண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

