தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரலட்சுமி திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
முன்னதாக சங்கரின் பாய்ஸ், பாலாஜி சக்திவேலின் காதல் உள்ளிட்ட படங்களில் நடிக்க வரலட்சுமிக்கு சான்ஸ் கொடுக்கப்பட்டது. விஜய் நடித்த சர்க்கார், தனுஷ் நடித்த மாரி 2, விஷால் நடித்த சண்டைக்கோழி 2 ஆகிய படங்களில் வரலட்சுமி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமிக்கும் அவரது நீண்ட நாள் காதலரான நிக்கோலாய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அடுத்தடுத்த நிகழ்சிகளும் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி என திரையுலகையைச் சேர்ந்த ஏராளமானவருக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை லீலா பேலஸில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். அதன் பிறகு தாய்லாந்தில் வைத்து வரலட்சுமி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இரு குடும்பத்தினரின் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த போட்டோஸ் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title