விஜய் மில்டன் இயக்கத்தில் ரிலீசான கோலிசோடா படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் பள்ளி படிக்கும் பெண்ணாக நடிகை சாந்தினி நடித்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில் பள்ளி மாணவியாக சாந்தினி இந்த படத்தில் அறிமுகம் ஆனார்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சாந்தினி. கோலிசோடா படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு சாந்தினி கரெக்டாக இருப்பார் என நினைத்து அவரது பெற்றோரிடம் பேசி சம்மதிக்க வைத்துள்ளார் விஜய் மில்டன். அடுத்ததாக சியான் விக்ரம் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிய பத்து எண்றதுக்குள்ள படத்தில் சாந்தினி தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து ஜீவாவின் சீறு படத்திலும் நடிக்க சாந்தினிக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சாந்தினி ஹீரோயினாக நடித்த குரங்கு கையில பூ மாலை என்ற படம் தோல்வியை சந்தித்தது. இதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் சாந்தினி திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு ஒரு குழந்தையை இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கோலிசோடா படத்தில் நடித்த நடிகைக்கு கல்யாணம் ஆகி குழந்தையை பிறந்துருச்சா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

