நடிகை பேபி அஞ்சு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழில் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 2. தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 1988-ஆம் ஆண்டு ருக்மணி படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா அரசு திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது. தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, செல்வி, மகராசி ஆகிய சீரியல்களில் பேபி அஞ்சு நடித்துள்ளார். சமீபத்தில் பேபி அஞ்சு அளித்த பேட்டியில் கூறியதாவது, பிரபல கன்னட நடிகர் ஆன டைகர் பிரபாகரனை 17 வயதில் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.

எனக்கு 17 வயது இருக்கும் போது அப்பா அம்மாவை மீறி காதலிச்சு குடும்பத்தை எதிர்த்து அவரை திருமணம் செய்தேன். அப்போதுதான் அவருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆனது தெரியவந்தது. என்னை விட வயதில் மூத்த பிள்ளைகள் அவருக்கு இருப்பதும் தெரியவந்தது. மிகவும் வருத்தப்பட்டேன். நான் கர்ப்பமாக இருந்தபோது அவர் வேறு ஒரு பெண்ணுடன் பழக ஆரம்பித்தார். இதனால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன்.

என் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும்போது அவர் இறந்து விட்டதாக தகவல் வந்தது. என் தாய் என்னை அழைத்தார். ஆனால் அவர் முகத்தை கூட பார்க்க நான் சொல்லவில்லை. என் மகன் அப்பாவை பார்த்ததே கிடையாது. டிவியில் தான் காட்டி இருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் என் அம்மா இறந்து விட்டதால் எட்டு வருடம் சினிமாவில் இருந்து விலகி விட்டேன். ஆஸ்திரேலியாவில் அண்ணன் வீட்டில் இருந்தேன். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளேன் என பேபி அஞ்சு கூறியுள்ளார்.

