கோவில் திருவிழாவில் பாடல்… பிரபல பாடகியை ஹீரோயினாக மாற்றிய இயக்குனர் கே.சுப்பிரமணியன்..!!

By admin on ஆனி 20, 2024

Spread the love

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா மகம் திருவிழா நடைபெறும். பல ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் திருவிழா நடைபெற்ற போது கலை நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பை இயக்குனர் கே சுப்பிரமணியன் ஏற்றுக்கொண்டார். இயக்குனர் கே சுப்பிரமணியனின் மனைவி எஸ்.டி சுப்புலட்சுமி நல்ல பாடகி ஆவார்.

நடிகர் சங்கத்தை நிறுவிய கே.சுப்பிரமணியத்தின் 118-வது பிறந்தநாள்! – News18  தமிழ்

   

இந்த நிலையில் எஸ்.டி சுப்புலட்சுமி M.S.சுப்புலட்சுமி நல்ல பாடகி. இதனால் அவரை கோவில் திருவிழாவில் பாட வைக்கலாம் என தனது கணவரிடம் கூறியுள்ளார். அவர் கூறியதை ஏற்று கே.சுப்பிரமணியன் M.S.சுப்புலட்சுமியை கோவில் திருவிழாவில் பாட வைத்துள்ளார். அவர் எதிர்பார்க்காத அளவிற்கு M.S.சுப்புலட்சுமி சிறப்பாக பாடியுள்ளார். அப்போதுதான் அவரது குரலில் தெய்வீக தன்மை இருந்தது இயக்குனருக்கு தெரியவந்தது.

   

இசையால் இவ்வுலகை ஆண்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி! | Life histroy of  M.S.Subbulakshmi - Tamil BoldSky

 

 

இதன் மூலமாக அடுத்த திருவிழாவில் பாடுவதற்கும் M.S.சுப்புலட்சுமிக்கு வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் இயக்குனர் கே.சுப்பிரமணியன் தனது அடுத்த படத்தில் M.S.சுப்புலட்சுமியை நடிக்க வைக்க எண்ணினார். அதன்படியே கடந்த 1938-ஆம் ஆண்டு ரிலீசான சேவாசதனம் படத்தில் M.S.சுப்புலட்சுமியை ஹீரோயினாக நடிக்க வைத்தார்.

சேவாசதனம் - தமிழ் விக்கிப்பீடியா

அந்த படம் மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு சாகுந்தலை, சாவித்திரி, மீரா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும், மீராபாய் என்ற ஹிந்தி திரைப்படத்திலும் M.S.சுப்புலட்சுமி நடித்தார். அதன்பிறகு ஏனோ அவருக்கு படங்களில் நடிக்க அதிக ஆர்வம் இல்லை. இதனால் தனக்கு பிடித்த இசை துறையை தேர்ந்தெடுத்து பாடல்களை பாடி பிரபலமானார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி சகாப்தத்தின் சில நினைவுகள் - MS Subbulakshmi: 100  years of a Carnatic legend - Samayam Tamil