அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகிறாரா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..? எதற்கு இந்த முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By Mahalakshmi on ஆனி 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.  அப்பா வயது நடிகருடன் ஜோடியாக நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் மிக கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் நுழைந்தார். ஒரு வழியாக சினிமாவிலும் தன்னுடைய திறமையை காட்டிய இவருக்கு காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

   

   

இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து மிகவும் அசதி இருப்பார். இந்த திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா அதில் மிக போல்டாக கெட்ட வார்த்தை எல்லாம் பேசி நடித்திருந்தார். பின்னர் கதாநாயகிகளை மையப்படுத்தி எடுத்து வரும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 

நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கின்றார். இவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு ஒரு அளவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. தமிழில் மட்டும் நடித்து வந்த இவர் புலிமடா என்ற படத்தின் மூலமாக மலையாளத்திலும் அறிமுகமானார்.

அடுத்ததாக தமிழில் கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலை நடுங்க உள்ளிட்ட திரைப்படங்களிலும் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் இவர் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் மிஸ் மேட்ச், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர். டக் ஜெகதீஷ், ரிபப்ளிக் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு மற்றொரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. அதன்படி அணில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். அப்படத்தில் வெங்கடேசன் மனைவி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வழியாக இருக்கின்றது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அப்பா வயதில் நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கப் போகிறாரா ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள்.