ஒரே ஒரு பாட்டால் சோலி முடிஞ்சது.. பிரபல காமெடி நடிகரின் படத்தால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஸ்ரேயா சரண்..!!

By admin on ஆனி 19, 2024

Spread the love

பிரபல நடிகையான ஸ்ரேயா சரண் இசுதாம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். இந்த படம் 2001-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதன் பிறகு 2002-ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் ஸ்ரேயா பிரபலமானார்.

Shriya Saran Announced Daughter Name

   

தமிழ் திரை உலகில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படம் மூலமாக ஸ்ரேயா சரண் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஸ்ரேயா சரண் நடித்த சிவாஜி படம் அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. முன்னணி நடிகர்களான ஜெயம் ரவி, விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஸ்ரேயா நடித்த மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், கந்தசாமி குட்டி உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

   

Actress Shriya Saran in Glamour Photos

 

கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்ரேயா சரண் உருசியாவைச் சேர்ந்த ஆண்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக ஸ்ரேயா சரண் வலம் வந்தார். இந்த நிலையில் ஸ்ரேயா சரண் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இந்தப் படம் 2008-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

#image_title

 

அதே சமயத்தில்தான் விக்ரமுடன் இணைந்து கந்தசாமி படத்தில் ஸ்ரேயா நடித்துக் கொண்டிருந்தார். அவர் வடிவேலு படத்தில் டான்ஸ் ஆட போவதை அறிந்த பலரும் வேண்டாம் என மறுப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த பாடலுக்கான தொகையை வாங்கி விட்டதால் தான் கண்டிப்பாக அதில் டான்ஸ் ஆடுவேன் என ஸ்ரேயா சரண் பிடிவாதமாக இருந்துள்ளார். அதன் பிறகுதான் அவரது சினிமா மார்க்கெட் குறைந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Indiralogathil Na Azhagappan Full Movie | Vadivelu | Thambi Ramaiah | Manobala | Pyramid Glitz HD - YouTube