என்னடா புது மாப்பிள்ளைக்கு வந்து சோதனை.. கல்யாணம் ஆனாலே இப்படித்தான்.. வைரலாகும் பிரேம்ஜியின் வீடியோ..!

By Mahalakshmi on ஆனி 19, 2024

Spread the love

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி சமையல் செய்யும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் கல்யாணம் ஆகிட்டாலே இப்படித்தான் என்று அவரை கலாய்த்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் பிரேம்ஜி . தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பின்னர் பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த அசத்தியிருக்கின்றார்.

   

   

அதிலும் இவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் இவரது காட்சிகள் கட்டாயம் இருக்கும். கடைசியாக இவர் சத்திய சோதனை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்திலும் நடித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்திருந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

 

இவரின் திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் விரைவில் ரிசப்ஷன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் தமிழ் சினிமாவை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி திருமணம் செய்து கொண்டு சென்னை வந்த பிறகு இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது அவரின் ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

41 வயது வரை முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த பிரேம்ஜி ,திருமணமே வேண்டாம் என்று கூறி வந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் சமையலறையில் தனது மனைவிக்காக சமைக்கும் காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றனர். எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே? கல்யாணம் ஆனாலே இப்படித்தான் என பலரும் அவரது ரிலீசுக்கு கீழ் கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Indhu PM (@indhu.premgi)