பிரபல நடிகையான ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ரைசா சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கஜோலின் உதவியாளராக நடித்திருப்பார்.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரைசாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ரைசா சிறப்பாக விளையாடினார். ஆனால் 63 நாட்களில் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.

முதல் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது கொடுக்கப்பட்டது. அதன் பிறகு தனுசு ராசி நேயர்களே, எஃப் ஐ ஆர், பொய்க்கால் குதிரை, காபி வித் காதல் உள்ளிட்ட படங்களில் ரைசா நடித்தார் பின்னர் வர்மா திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடைசியாக ரைசா நடித்த கருங்காப்பியம் என்ற படம் ரிலீஸ் ஆனது.

தற்போது தி சேஸ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது சேலை அணிந்து கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

