பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இதில் பிரசாந்த், பிரபு, சினேகா, லைலா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வருகிற செப்டம்பர் மாதம் கோட் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் துப்பாக்கி படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சத்யன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரராக நடித்த விஜய் மும்பை நகருக்குள் ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் தீவிரவாதிகளை எதிர்த்து அழிப்பது தான் படத்தின் மையக்கதை.

இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் துப்பாக்கி படத்தில் இருந்து நீக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. பிரபல ஜாம்பவான்களின் காமெடியை விஜய் இமிடெட் செய்தார். கடந்த 1989-ஆம் ஆண்டு கரகாட்டம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் காம்போ அருமையாக இருக்கும். கவுண்டமணி ஒரு ரூபாய்க்கு இரண்டு வாழைப்பழங்களை வாங்கி தருமாறு செந்திலிடம் கூறுவார்.
செந்திலும் கடைக்கு சென்று இரண்டு வாழைப்பழங்களை வாங்கி ஒன்றை சாப்பிட்டுவிட்டு மற்றொன்றை கவுண்டமணியிடம் கொடுப்பார். அதனை வாங்கிய கவுண்டமணி ஒரு பழம் எங்கே இருக்கு இன்னொன்னு எங்க என கேள்வி கேட்பார். அதற்கு செந்தில் அதுதாண்ணே இது என பதில் கூறுவார். அந்த காமெடி இப்போது வரை டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்த காமெடி காட்சியை ஹிந்தியில் மிமிக்ரி செய்து விஜய் சிரிக்க வைக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏ.ஆர் முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
