கைதட்டுங்கப்பா.. கூல் சுரேஷின் கை புள்ளைங்க 4 பேர் இவங்க தானா..? வாயைக் கொடுத்து மாட்டிகிட்டீங்களே..!

By Mahalakshmi on ஆனி 13, 2024

Spread the love

நடிகர் கூல் சுரேஷ் ஹீலர் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்ற திரைப்படத்தின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானவர் கூல் சுரேஷ். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். சந்தானத்துடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் சிம்பு, அஜித் உள்ளிட்ட நடிகர்களுடனும் இவர் சேர்ந்து நடித்திருக்கின்றார்.

   

   

பெரும்பாலும் எந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு சென்றாலும் அதில் வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு என அவரை பிரமோஷன் செய்து விடுவார். மேலும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு விமர்சனமும் கூறுவார். அதிலும் அந்த திரைப்படத்திற்கு செல்லும் போது அப்படத்திற்கு ஏற்றார் போல் கெட்டப் போட்டுக் கொண்டு செல்வார்.

 

இது மேலும் அவரை பிரபலமாக்கியது. தனது சச்சையான பேச்சுக்கள் மூலமாகவே மிகப்பெரிய புகழை எட்டிய இவர் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியிலும் தன்னுடைய எதார்த்தமான பேச்சால் பிரபலமான கூல் சுரேஷ் நீண்ட நாள் வரை தாக்குப் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

எப்போதும் போல படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்துகொண்டு சர்ச்சையாக பேசி வருகின்றார். அந்த வகையில் தற்போது ஹீலர் என்ற திரைப்படத்தின் பிரமோஷன் விழாவில் கலந்து கொண்டார். அதில் பல விஷயங்களை பேசி இருந்த அவர் எப்போதும் வெந்து தணிந்தது காடு என்றுதான் ஆரம்பிப்பார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பேசி ஆரம்பித்தார்.

மேலும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்த அவர் ரயில் செல்வதற்கு தனியாக தண்டவாளம் இருக்கின்றது. பேருந்து செல்வதற்கு ரோடுகள் இருக்கின்றன. ஆனால் ஒரு மனிதனின் அவசர தேவைக்கு பயன்படும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி ரூட் எதற்கு இல்லை என்று பேசி இருந்தார். மேலும் இந்த படத்தில் தனக்கு ஒரு காட்சியை ஒதுக்கும்போதே இயக்குனர் உங்களை நினைத்து தான் எழுதினேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் தான் செய்யும் பல நல்ல உதவிகளையும் அவர் பாராட்டி இருந்தார் என்று பேசினார்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குனர் கைதட்டினார். இதை பார்த்த கூல் சுரேஷ் நான் பேசியதில் ஆச்சரியப்பட்டு இயக்குனரை கைதட்டுகிறார். ஆனால் நான் கூடவே கூட்டிட்டு வந்த நான்கு பேர் சும்மா தான் இருக்காங்க என்று கூறினார். இதிலிருந்து தான் எங்கு சென்றாலும் கைதட்டுவதற்கு நான்கு பேரை கூல் சுரேஷ் கூப்டு கொண்டு செல்கிறார் என்று தெளிவாக தெரிந்து விட்டது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கைப்புள்ள வாயை கொடுத்து மாட்டிக்கிட்டீங்களே என்று கேலி செய்து வருகிறார்கள் .