இதுக்கு மிலிட்டரி டிரெய்னிங்கே பரவால்ல.. என்னென்ன கண்டீஷன் போடுறாரு பாருங்க பாலகிருஷ்ணா காரு… அவரோட வேல பாக்குறது இவ்ளோ கஷ்டமா?

By vinoth on ஆனி 13, 2024

Spread the love

ஆந்திர தேசத்தில் இருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் பலர். அப்படி ஒருவர்தான் என் டி ஆரின் மகன் பாலகிருஷ்ணா. சூப்பர் மேன் பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் கூட செய்ய முடியாத ஆக்‌ஷன் காட்சிகளை எல்லாம் நடித்து தமிழ்நாட்டில் அதிக ட்ரோலுக்கு ஆளானவர் பாலகிருஷ்ணா.

அதே போல அவர் பொது இடங்களில் கலந்துகொள்ளும் போது செய்யும் சேட்டைகளும் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்துள்ளன. சமீபத்தில் கூட கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலையா அஞ்சலியை மேடையில் தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதன் பிறகு அஞ்சலில் அவரைப் பற்றி புகழ்ந்து பதிவு செய்து அந்த விமர்சனங்களை மடைமாற்றினார்.

   

இந்நிலையில் பாலையா உண்மையில் எப்படிப்பட்டவர் என்பது பற்றி சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “பாலையா மிகவும் ஜோதிட நம்பிக்கை உள்ளவர். அவர் தனக்கென்றே ஒரு தனி ஜோதிடரை வைத்துள்ளார். அவர் குறித்துக் கொடுக்கும் நேரத்தில்தான் வெளியில் கிளம்புவார். அவர் சொல்லும் ஆடைகளைதான் அணிவார்.

   

அதே போல தன்னிடம் யாராவது கதை சொல்ல வந்தால் கூட, அவர்கள் வீட்டில் இருந்து இத்தனை மணிக்குதான் கிளம்ப வேண்டும், இத்தனை மணிக்குதான் தன்னை வந்து பார்க்கவேண்டும் என்றெல்லாம் கண்டீஷன் உண்டாம்.

 

balakrishna

இதாவது பரவாயில்லை இன்னொரு கண்டீஷன்தான் அல்டிமேட். ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலையாவுக்குப் பிடிக்காத நிறத்தில் யாராவது சட்டை போட்டிருந்தால் கூட அவருக்குப் பிடிக்காதாம். அதனால் அவரோடு வேலை செய்பவர்கள் எல்லாம் அவருக்கு பிடித்த பிடிக்காத விஷயங்களை முன்கூட்டியே கேட்டு தெரிந்துகொள்ளவேண்டுமாம்.

தன்னோடு நடிக்கும் சக நடிகைகள் அவரைப் பார்த்ததும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டுமாம். அப்படி செய்யும் நடிகைகளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதாம். அப்படி செய்யாதவர்கள் பல மறைமுக பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுமாம்” என இப்படி பல நம்பமுடியாத தகவல்களை அந்தணன் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.