தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித் பொது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை பிரபல நடிகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படும் அஜித் பல கோடி ரசிகர்களை வைத்திருக்கிறார். என்னதான் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருந்தாலும் அவர் பொது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்வது கிடையாது. அது ஏன் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் அஜித் தற்போது லைக்கா நிறுவன தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் கடைசி ஷெடுல் அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்படுகின்றது. இதற்கு இடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. குட் பேட் அக்லி படத்தின் ஷெடுலை முடித்துவிட்டு விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. பிஸியாக நடித்து வரும் அதில் அப்போது பைக் ரைடிங் செல்வது வழக்கம் தான். இப்படித்தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வரும் அதில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது குறித்து நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “சினிமாவுக்கு அறிமுகமான புதிதில் நடிகர் அஜித்துக்கு அவ்வளவு தமிழ் தெரியாதாம். அப்போது என்னை பார்த்து பலர் தமிழ் திரைப்படத்தில் நடிக்கிறார், ஆனால் தமிழே தெரியாதாம் என்று கிண்டலாக கூறுவார்கள். நமக்கு தமிழ் தான் வரவில்லை, சரி ஆங்கிலத்தில் பேசுவோம் என்று பேசினால் இங்கிலீஷ்ல எவ்வளவு ஸ்டைலா பேசுறான் பாரு என்று அதையும் விமர்சனம் செய்தார்கள்.

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பேசினால் தானே பிரச்சனை வருது பேசாம அமைதியாய் இருப்போம் என்று எண்ணி சில காலம் அமைதிகாத்தால் என்ன திமிரு பாரு என்ன சொன்னாலும் பதிலே பேச மாட்டேங்கிறான் என்று அதையும் விமர்சனம் செய்தார்கள். அப்போதான் எனக்கு புரிந்தது, இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் மதிப்பு கொடுத்தால் நம் வாழ்க்கையை நாமே வீணாகிக் கொள்வோம் என்று எண்ணி அதிலிருந்து இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பெரிதாக மதிப்பு கொடுப்பதில்லை என்று அவர் கூறியதாக தெரிவித்திருந்தார்.
