![aa - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/aa-7.jpg)
CINEMA
அடடே எல்லா படத்திலும் அந்த ஒரு செண்டிமெண்ட்.. கிரேசி மோகன் கமல்ஹாசன் படங்களில் இதை நீங்க கவனிச்சீங்களா..?
பிரபல நடிகரான கிரேசி மோகன் தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா என பன்முகத் திறமை கொண்டவராக இருந்தார். இவரது நெருங்கிய நண்பர் உலகநாயகன் கமல்ஹாசன். கமல்ஹாசன் படங்கள் என்றாலே முழு ஈடுபாடு கிரேசி மோகன் வேலை செய்வாராம். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி மாரடைப்பால் கிரேசி மோகன் உயிரிழந்தார்.
கமல்ஹாசனும் கிரேசி மோகனும் இணைந்து தெனாலி, வசூல்ராஜா, பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள், இந்தியன், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். 1989 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கல்யாணத்துக்கு கல்யாணம், பிரைசில் கிரேசி, விடாத சிரிப்பு உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட நகைச்சுவை தொடர்களிலும் கிரேசி மோகன் வேலை பார்த்துள்ளார்.
கிரேசி மோகன் கிரேசி கிரியேஷன்ஸ் என்ற நாடக நிறுவனத்தை நடத்தினார். அவர் சின்னத்திரை சீரியல்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வந்தார். இந்நிலையில் கமல்ஹாசனும் கிரேசி மோகன் இணைந்து பணியாற்றும் படங்களில் ஹீரோயின் பெயர் ஜானகி என்பதை யாராவது கவனித்தீர்களா?
அவ்வை சண்முகி படத்தில் மீனாவின் பெயர் ஜானகி, அபூர்வ சகோதரர்கள் படத்தில் கௌதமியின் பெயர் ஜானகி, காதலா காதலா படத்தில் ரம்பாவின் பெயர் ஜானகி, பம்மல் கே சம்பந்தம் படத்தில் சிம்ரனின் பெயர் ஜானகி, வசூல்ராஜா படத்தில் சினேகாவின் பெயர் ஜானகி, தெனாலி படத்தில் ஜோதிகாவின் பெயர் ஜானகி. இப்படி இருவரும் சேர்ந்து பணியாற்றும் படங்களில் ஹீரோயின் பெயர் ஜானகி என்று தான் இருக்கும். சென்டிமென்டலாக இருவரும் இதனை பின்பற்றி வந்தனர். அந்த படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.