பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீ கோபிகா பிரபல நடிகரை நிச்சயதார்த்தம் செய்திருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீ கோபிகா மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் நடிகை ஓவியா நடித்த 90 எம்எல் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து Wolf என்கின்ற படத்திலும் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் வந்த இவர் சுந்தரி சீரியல் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரீ கோபிகா சீரியல்களிலும் நடித்து வந்தார்.

அதனை தொடர்ந்து அன்பே வா சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலும் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்நிலையின் நடிகை ஸ்ரீ கோபிகாவுக்கும் மலையாள நடிகரான வைஷாக் ரவி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஸ்ரீ கோபிகா தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு 2016 முதல் எனது நண்பனாக காதலராக இருக்கும் வைஷாக்-வுடன் மகிழ்ச்சியாக அதிகாரப்பூர்வமாக நிச்சியம் செய்து விட்டேன் என பதிவிட்டு இருக்கின்றார்.

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஸ்ரீ கோபிகா மற்றும் வைசாக் ரவி ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..

