தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகைகள் வளம் வந்த நடிகை சரண்யா மோகன் தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சரண்யா மோகனுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை என்கின்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் நடித்து அறிமுகமானவர் நடிகை சரண்யா மோகன். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து நல்ல வரவேற்பை பெற்று இவர் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் பாவனாவுக்கு தங்கையாகவும் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்த சரண்யா சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த அசத்தியிருப்பார். உண்மையான அண்ணன் தங்கையாகவே இருப்பதாக பலரும் தெரிவித்து வந்தனர். தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

பின்னர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போக திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. சமீபத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவரது குழந்தைகள் வளர்ந்து இருந்ததை பார்த்த ரசிகர்கள் பலரும் சரண்யா மோகனுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகள் இருக்கிறார்களா என்று கேட்டு வருகிறார்கள்.
