ஐபிஎல் 2024 தொடரின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் ஹைதராபாத் கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டது. போட்டியில் ஹைதராபாத் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் போட்டி சிம்பிளாக முடிந்ததால் ஏமாற்றத்தில் திரும்பினர். இந்த நிலையில் கல்கத்தா அணி சேம்பியன் பட்டத்தை வென்றதால் அதன் உரிமையாளர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் மைதானத்தில் இறங்கி ரசிகர்களை நோக்கி கை அசைத்து நன்றி கூறினார்.

ஷாருக்கானின் மனைவி கௌரி கான், மகள் சுஹானா கான், மகன் ஆரியன் கான், ஆபிராம் கான் ஆகியோர் மைதானத்திற்கு வந்தனர். அவர்கள் கோப்பையை கையில் வைத்துக்கொண்டு கொல்கத்தா அணி வீரர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் கையில் கட்டி இருந்த வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஷாருக்கான் கையில் கட்டி இருந்த ரிச்சர்ட் மில்லே(RICHARD MILLE RM 052 Tourbillon Skull Titanium 2012 ) நிறுவனத்தின் வாட்ச் விலை தோராயமாக 4 கோடியே 15 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் ஒரு வாட்ச் இவ்வளவு விலையா என ஆச்சரியத்தில் உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

