Connect with us

நாடகத்தில் 19 வயதில் 60 வயது கிழவனாக நடித்து அசத்திய நடிகர்.. இதனால் சினிமாவில் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி..

CINEMA

நாடகத்தில் 19 வயதில் 60 வயது கிழவனாக நடித்து அசத்திய நடிகர்.. இதனால் சினிமாவில் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி..

 

தமிழ் திரையுலகில் மிகவும் உன்னதமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் வி கே ராமசாமி. இவர் நாடக கம்பெனியிலிருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரையுலகில் இவர் அறிமுகமான சம்பவமே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். விகே ராமசாமி தனது பள்ளி பருவத்தில் மிக நன்றாக படிக்கக் கூடியவர்.

   

படிக்கும்போது அவரின் உறவினரின் நாடக கம்பெனிகள் பெரிதளவில் ஈர்க்கப்பட்ட வி கே ராமசாமி தனது எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரை தேடி வர ஒரு நாடக கம்பெனியில் சேர்ந்து இருந்திருப்பது தெரிய வந்தது. நாடகத்தில் தனக்கு இருக்கும் விருப்பத்தை எடுத்துக் கூற அவரை தந்தையும் சம்மதித்தார்,

அதைத்தொடர்ந்து பா நீலகண்டன் எழுதிய நாம் இருவர் என்ற நாடகத்தில் விகே ராமசாமி 60 வயது கிழவனாக நடித்திருந்தார். அப்போது அவருக்கு வயது 19 தான். ஆனால் 60 வயது கிழவனாக நடித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். ஒருமுறை இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக ஏ வி எம் மையப்ப செட்டியார் இயக்குனர்களுடன் வருகிறார்.

வந்தபோது அந்த நாடகத்தை பார்த்துவிட்டு அதில் நடித்த இந்த கலைஞர்கள் அனைவரையும் வர சொல்கிறார். அதிலும் மெய்யப்ப செட்டியாருக்கு அந்த முதியோர் வேசத்தில் நடித்த விகே ராமசாமியை மிகவும் பிடித்து விட அவரை உடனே அழைத்து வர சொல்கிறார். உடனே விகே ராமசாமி வந்து நிற்க மெய்யப்பசெட்டியாரோ இவர் இல்லை, அந்த முதியவர் என்று கூற நீலகண்டன் இவர்தான் அந்த முதியவர் தோற்றத்தில் நடித்த இளைஞன் என்று கூற மெய்யப்ப செட்டியாருக்கு ஆச்சரியம்.

உடனே நாம் இருவர் நாடகத்தை படமாக்க விரும்பிய மெய்யப்ப செட்டியார் அந்த முதியவர் கதாபாத்திரத்திற்கு விகே ராமசாமி தான் நடிக்க வேண்டும் என்று சினிமாவில் அறிமுகம் செய்கின்றார். சினிமாவில் முதன்முதலாக அறிமுகம் ஆகும்போது ராமசாமிக்கு வயது 21. ஆனால் 60 வயது கிழவனாக நடித்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தார்.

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அசத்தியிருப்பார். எம்ஜிஆர், சிவாஜி, பிரபு, ரஜினி, கமல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்த பெருமை ராமசாமிக்கு உண்டு. மௌனராகம், அக்னி நட்சத்திரம், வேலைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவரின் நகைச்சுவையான காமெடி ரசிகர்களை ரசிக்கும் படியாக வைத்திருந்தது. இப்படி இவர் நடிப்பில் பல படங்களை நாம் கூறிக் கொண்டு போகலாம்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top