நடிகர் சிம்பு சண்டை காட்சியில் ரிகர்சல் எதுவும் இல்லாமல் அசால்டாக நடித்து முடித்ததை பார்த்து மிரண்டு போனதாக ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேட்டியில் பேசியிருப்பது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிம்பு. என்ன தான் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும், பல சர்ச்சைகளில் சிக்கி ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்தாலும் ரசிகர்கள் இவரை கைவிடவில்லை.

தொடர்ந்து முயற்சி செய்து மீண்டும் பிட்டாக மாறி தற்போது தமிழ் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியிருக்கின்றார் நடிகர் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.
தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகின்றார். இந்த திரைப்படத்தை கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெரும்பொருள் செலவில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது. அதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் தக் லைப் திரைப்படத்தில் சிம்பு கமிட்டாகி இருக்கின்றார்.

துல்கர் சல்மான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது சிம்பு கமிட்டாகி இருக்கின்றார். படத்தில் இருந்து சிம்பு என்ட்ரி ஒன்றை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள். அதில் சிம்புவின் கெட்அப் மாஸாக ஸ்டைலாக இருந்ததாக கூறி வருகிறார்கள். அப்படியே காளை படத்தில் பார்த்தது போல இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.
இப்படி பல பாராட்டுகளை பெற்று வரும் சிம்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு எடை கூடி அவர் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. வந்தா ராஜாவா தான் வருவேன், செக்கச் சிவந்த வானம் போன்ற திரைப்படங்களில் சிம்புவால் ஓட முடியவில்லை என்றும், நடனமாட முடியவில்லை என்று கூறி சிம்பு மிகவும் வருத்தப்பட்டாராம். இதனை ஒரு பேட்டியில் ஸ்டாண்ட் மாஸ்டர் சில்வா பேசியிருந்தார்.

இப்படி இருந்த சிம்பு ஒரு காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா என்று கூறியவர் நான் ஸ்டண்ட் மாஸ்டர் அறிமுகமான சமயத்தில் முதன்முதலாக நடிகர் சிம்புவுடன் பணியாற்றுகிறேன். அப்போது இந்த பக்கம் தனது குழுவினரை வைத்து மிகப்பெரிய ஸ்டண்ட் காட்சி ஒன்றை ரிகர்சல் செய்து வந்தேன். அங்கு வந்து சிம்புவை பார்த்த நான் எனது அசிஸ்டனிடம் கூறி அவரை ரிகர்சலுக்கு வருமாறு கூறினேன்.
ஆனால் அவரோ டேக் போய்விடலாம் என்று கூறிவிட்டார். நான் இல்லை இது ஸ்டன்ட் காட்சி கட்டாயம், ரிகர்ஸல் செய்ய வேண்டும் என்று கூறியதும், மாஸ்டர் டேக் போய்விடலாம் என்று சொல்லிவிட்டார். இதை பார்த்த நான் மனதுக்குள்ளே நீ என்ன பண்ணிக் கிழிக்கப்போறேன் என்று பார்க்கலாம் அப்படின்னு நினைச்சேன்.

ஆனால் கொஞ்சம் கூட தவறு எதுவும் இல்லாமல் அந்த காட்சியை பர்பெக்ட்டாக எடுத்து முடித்தார். எந்த இடத்தில் திரும்ப வேண்டும், எந்த இடத்தில் பொசிஷன் இருக்க வேண்டும், கேமராவை எப்போது பார்க்க வேண்டும் என அனைத்தையும் பர்ஃபெக்டாக செய்திருந்ததை பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேன் என ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
