பிக்பாஸ் பிரதீப் மற்றும் அவரின் காதலியை குடும்பத்துடன் நேரில் சென்று சந்தித்த யுகேந்திரன்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on வைகாசி 23, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. அதிலும் குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக்m சூப்பர் சிங்கர், பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார்.

   

இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா, பிரதீப் ஆன்டனி, சரவணன் விக்ரம், மாயா, விஷ்ணு, ஜோவிகா, மணி சந்திரா, வினிதா தேவி, யுகேந்திரன், வாசுதேவன் என பலரும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். எல்லா சீசன்களை காட்டிலும் இந்த சீசன் சற்று விறுவிறுப்பாக இருந்தது. இந்த சீசனில் பிரதீப் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

   

 

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்திருந்தால் கூட இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு பல ரசிகர்களின் ஆதரவு அவருக்கு கிடைத்தது. தொடர்ந்து சினிமாவிலும் நடித்தும் திரைப்படங்களை இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். சமீபத்தில் தான் இவர் தனது காதலியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்த சீசனில் கலந்து கொண்டவர் தான் யுகேந்திரன். பிரபல பாடகரான மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன் ஆவார். இவரும் யுகேந்திரனும் தற்போது சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அவர் தனது மனைவி மற்றும் அம்மாவுடன் பிரதீப் அவரின் காதலியையும் சந்தித்து இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த பார்வையாளர்கள் யுகேந்திரன் மற்றும் பிரதீப் நட்பை பாராட்டி வருகிறார்கள்.