சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் தான் இந்த நடிகருடன் போட்டி, இந்த நடிகையுடன் போட்டி என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தொலைக்காட்சியும் அதற்கு சலித்தது அல்ல. ஒரு தொலைக்காட்சியில் ஒரு சீரியல் ஹிட்டாகிவிட்டால் போதும் மற்றொரு தொலைக்காட்சியும் அதற்குப் போட்டியாக சீரியல்களை களம் இறங்குகிறது.

ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சன் டிவி முதலாவது இடத்திலும், இரண்டாவது இடத்தில் விஜய் டிவி, மூன்றாவது இடத்தில் ஜீ தமிழ் இருக்கின்றது. எப்படியாவது விஜய் டிவி சன் டிவியுடன் போட்டி போட்டு முதலிடத்தை பிடித்து விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றது.
அதை எண்ணம் தான் ஜீ தமிழுக்கும், ஜீ தமிழில் பொறுத்தவரையில் டப்பிங் சீரியல்களை களம் இறங்குவதில் பேர் போனது. ஒரு காலத்தில் பாலிமர் சேனல் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பல ஹிட் சீரியல்களை டப் செய்து தமிழில் ஒளிபரப்பி வந்தது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழும் அதில் இறங்கி இருக்கின்றது, உள்ளம் கொள்ளை போகுதே என்கின்ற சீரியல் மக்களின் ஃபேவரிட் நாடகமாக இருந்தது.

அந்த சீரியலை மறுபடியும் ரீமேக் செய்து ஒளிபரப்புவதற்கு ஜீ தமிழ் முடிவெடுத்துள்ளது. அதாவது தொழிலதிபரான ராம் நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பிரியாவை மணந்து கொள்வதும், பின்னர் இருவரும் எப்படி சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதுதான் இந்த நாடகத்தின் கதை. அந்த சீரியலை மீண்டும் மக்களுக்காக ஜீ தமிழ் களம் இறங்குகின்றது.
அதாவது இந்த சீரியலை ரீமேக் செய்ய முடிவு செய்து நடிகர் ஜெய் ஆகாஷ், ராம் கதாபாத்திரத்திலும் நடிகை ரேஷ்மா பிரியா கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கின்றார். நடிகை ரேஷ்மா ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான பூச்சூடவா, அபி டெய்லர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் கிழக்கு வாசல் சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலும் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த சீரியல் தற்போது எடுக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகின்றது. உள்ளம் கொள்ளை போகுதே சீரியலை ரீமேக்ஸ் செய்ய போகிறார்கள் என்பதை தெரிந்த மக்கள் இந்த சீரியல் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் சீரியல் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல். மேலும் அந்த சீரியல் பாடலும் மிகவும் பிரபலமாக இருந்தது.
