நான் சம்பாதிச்சத எல்லாம் என் பையன் காலி பண்ணிட்டான்… புலம்பித் தள்ளிய ஏ எல் விஜய்யின் தந்தை!

By vinoth on வைகாசி 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் பைனான்சியராகவும் பல ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருபவர் ஏ எல் அழகப்பன். இவர் தன்னுடைய மூத்த மகனான உதயாவை வைத்து திருநெல்வேலி, கலகலப்பு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் வெற்றி பெறாததால் நேரடி தயாரிப்பாளராக இல்லாமல் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்.

இவரின் மூத்த மகன் உதயாவை திருநெல்வேலி என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆக்கினார். அந்த படத்தில் அழகப்பனுக்காக பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் உதயாவுக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

   

அதைத் தொடர்ந்து உதயா பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். எந்தவொரு படமும் ஓடவில்லை. ஆனாலும் விடாப்பிடியாக அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில்தான் ஏ எல் அழகப்பன் தன் மகன் மீதான குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

   

அதில் “நான் எல்லாம் கலகலப்பு(2001) படத்துக்கு பிறகு நேரடியாக படத் தயாரிப்பில் ஈடுபடவே இல்லை. பைனான்ஸ் கொடுப்பது மட்டும்தான்.சினிமா தொழில் இப்போது சரியே இல்லை. ஆனா என் பசங்க படம் எடுக்குறாங்க. பெரியவன் எல்லா படத்துலயும் பணத்த இழந்துகிட்டே இருக்கான். நான் ரியல் எஸ்டேட்ல சம்பாதிச்சத எல்லாம் அவன் காலி பண்ணிகிட்டு இருக்கான். அவன்கிட்ட நான் வேண்டாம்டா சொல்லிட்டேன். ஆனா அவன் ஹீரோவாகனும்னு வெறியோட இருக்கான்.

 

கடைசியா அவன் எடுத்த உத்தரவு மகாராஜா திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் எல்லோரும் நான் யார் யாருக்கோ பணம் கொடுக்கிறேன், மகனுக்கு கொடுக்க மாட்டேங்குறேன்னு பேசுனாங்க. இதுவரைக்கும் அவன் எடுத்த எல்லா படத்துக்கும் நான் மறைமுகமாக பணம் கொடுத்துட்டுதான் இருக்கேன்” எனக் கூறியுள்ளார்.

ஏ எல் அழகப்பனின் இளைய மகனான ஏ எல் விஜய், வெற்றிகரமான இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அஜித், விஜய், ஜெயம் ரவி உள்ளிட்டவர்களை வைத்து படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருக்கிறார்.