சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ராதாகிருஷ்ணன் தமனிக்குப் பிறகு ஃபேஷன் மற்றும் சில்லறை விற்பனை துறையில் இந்தியாவின் இரண்டாவது பணக்காரராக வலம் வருபவர் யூசுப் அலி.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிகோவில் பிறந்த இவரின் முழு பெயர் யூசுப் அலி முசலியாம். வீட்டில் இவரை அப்துல் காதர் என்று அழைப்பார்கள். 1973 ஆம் ஆண்டு அபுதாபிக்கு சென்ற இவர் 1990 களில் ஹைப்பர் மார்க்கெட்டை திறந்தார். அரபு எமினேடின் தலைவரான அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு லூலு குழுமம் பிரபலமான ஷாப்பிங் மால்களையும் ஹைபர் மார்க்கெட்டுகளையும் திறந்தது.
தற்போது இந்தியாவிலும் திருவனந்தபுரம், கோவை என பல பகுதிகளில் தனது லூலூ ஹைப்பர் மார்க்கெட் கிளைகளை தொடங்கி வருகின்றார். பல லட்சம் கோடிகளுக்கு அதிபராக இருக்கும் யூசுப் அலி ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வருகின்றார். வணிக ஈடுபாட்டை தவிர யூசுப் அலி பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடையவர். இவர் பல சமூக சேவைகளை மக்களுக்காக செய்து வருகின்றார்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை கடந்த சில மாதத்திற்கு முன்பு அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது யூசுப் அலிக்கு சால்வை அணிவித்து வரவேற்று ரஜினிகாந்த் அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்பட்டது.
அந்த சமயத்தில் தான் சலாம் திரைப்படம் வெளியானது. அப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு தொழிலதிபராக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அபுதாபியில் இருக்கும் எம்ஏ யூசுப் அலி வீட்டிற்கு விருந்தினராக சென்று இருக்கின்றார். நடிகர் ரஜினிகாந்தை யூசுப் அலி மரியாதையாக வரவேற்று அழைத்துச் சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது.
View this post on Instagram
