ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக மாற்றிய குல்ஷன் குமார் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். பாலிவுட் மியூசிக் மற்றும் திரைப்படங்களை நீங்கள் பார்த்திருந்தீர்கள் என்றால் டி சீரிஸ் என்ற பெயர் கட்டாயம் தெரிந்திருக்கும்.

பாலிவுட் இசையுலகின் முடிசூடா மன்னனாக வளம் வந்தவர் குல்ஷன் குமார். குமார் ஷானு முதல் சோனு நிஹாம் வரை ஹிந்தியில் பல பிரபலங்களை தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்தவர். இந்தியாவில் மிகப் பிரபலமாக இருந்த தி கிரேட் ஓல்ட் மியூசிக் லேபிள் போன்றவற்றை ஓரம் கட்டியவர். ஆடியோ கேசட் வடிவத்தை இவர் தான் அறிமுகப்படுத்தினார் .
மலிவான விலையில் கேசடுகளை விற்பனை செய்து வந்த இவர் பாலிவுட் இசை உலகத்தை புரட்டிப்போட்ட ஒரு மகான். 1951 ஆம் ஆண்டு பஞ்சாபி ஹிந்து குடும்பத்தில் பிறந்த இவரின் தந்தை பல ஜூஸ் கடை வைத்திருந்தார். இளம் வயதில் இருந்து இவருக்கு இசை மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அதில் பல நுணுக்கங்களை கற்றறிந்த இவர் அதனை தொழிலாக மாற்றினார்.

அவரது குடும்பம் மலிவான ஆடியோ கேசட்கள் மற்றும் ரெக்கார்டுகளை விற்கும் ஒரு கடையை தொடங்கியது. இதுதான் அவரின் தொடக்கம். 1983 ஆம் ஆண்டு குல்ஷன் குமார் சூப்பர் கேசட் இண்டஸ்ட்ரி எனப்படும் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இதுதான் பின்னாலில் டி சீரிஸ் என்ற பெயரில் மாறியது. இந்திய இசை உலகில் மறுமலர்ச்சியை கொண்டு வருவதில் இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
அதுமட்டுமில்லாமல் பல கலைஞர்களையும் பாடல்களையும் உருவாக்கியது. தொடர்ந்து பல சாதனைகளை செய்து வந்த குல்ஷன் குமார், துருதிஷ்டவசமாக சில கூலிப்படையினரால் 1997 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். தாவூத் மெர்ச்சன்ட் என்று அழைக்கப்பட்டு வந்த அப்துல் ராம்சன் குமாரை கொலை செய்ததாக 2002 ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது.

பின்னர் அப்துல் ரஹ்மான் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார், 2016ஆம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டார். குல்ஷன் குமாரின் சாம்ராஜ்யத்தை தற்போது அவரது மகனான பூஷன் குமார் கவனித்து வருகிறார். டிசிரிஸ்-இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பதவி வகித்து வருகிறார். டி சீரிஸ் youtube சேனல் அதிக அளவு சப்ஸ்கிரைப்ர்களை பெற்றிருக்கின்றது. இப்படி பல கோடி நிறுவனத்தை உருவாக்கிய பெருமை குல்ஷன் குமாரையே சேரும்.
