அடிச்சது ஜாக்பாட்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..

By Mahalakshmi on வைகாசி 19, 2024

Spread the love

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் அண்ணாமலை விஜயா, முத்து மீனா, மனோஜ் ரோகினி, ரவி ஸ்ருதியின எட்டு முக்கிய கேரக்டர்கள் நடித்து வருகிறார்கள்.

   

டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னணி இடத்தில் எப்போதும் இருந்து வருகின்றது. இந்த சீரியலில் ஹீரோயினி மீனாவின் தங்கையாக சீதா என்கின்ற கதாபாத்திரத்தில் சங்கீதா லியோனி என்பவர் நடித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவர். இவர் தற்போது வெள்ளித் துறையில் அறிமுகமாக இருக்கின்றார். அவரின் முதல் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

   

 

இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவாக நடித்து வரும் சங்கீதா நிஜத்தில் ஒரு பல் மருத்துவர். இவர் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் நடித்து வரும் சங்கீதா குற்றம் புதிது என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ரஜித் என்பவர் இயக்குகிறார். இந்நிலையில் இப்படம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.